ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரஜோரியில் உள்ள நர்லா பாம்பல் பகுதியில் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார் மற்றவர்கள் தப்பி ஓட்டம். இந்த என்கவுன்டரில் இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு போலீஸ் அதிகாரி என மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன் விட்டுச் சென்ற பொருட்களை, ராணுவத்தினர் மீட்டுள்ளனர். தீவிரவாதிகள் ரஜோரி காடுகளில் தங்கள் சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக சோலார் சார்ஜர்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றைய தினம், ரஜோரியின் டெரியாத் பகுதியில், டெரியாத்தின் பட்ராரா பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்தில் தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்நிலையில் ரஜோரி காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை நெருங்கியபோது இந்த என்கவுன்டர் ஏற்பட்டதாக் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com