தியாகதுருகம் அருகே உள்ள மாடூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஷ்வா. இவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வாலிபர் ஒருவருடன் அந்த இளம் பெண்ணிற்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஷ்வாவிற்கு தகவல் தெரிந்துள்ளது. இதனால் கோவமடைந்த விஷ்வா, அந்த இளம்பெண்ணும் தானும் காதலித்த போது ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை, மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை, திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் விஷ்வா, அந்த பெண்ணிடம் “நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும். இல்லையெனில், உனக்கு திருமணம் நடக்க விடமாட்டேன்” என மிரட்டியுள்ளார்.
இதனால் பதறிப்போன அந்த இளம்பெண், இது குறித்து தியாகதுருகம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஷ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com