இது குறித்து நகராட்சி ஆணையாளர், நகராட்சி தலைவரை சந்தித்து விளக்கம் கேட்க முயன்ற போதும், அவர்களை சந்திக்க முடியவில்லை. அதேநேரத்தில், நகராட்சி தரப்பில் அமைச்சரின் வருகைக்காக காத்திருப்பதாக தகவல் தரப்பட்டது. வேறு பதில் எதுவும் அளிக்கவில்லை.
இதனால் அந்த பூங்காவில் காலை, மாலை நடை பயிற்சி செய்யும் மக்கள் மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய மாணவ, மாணவியர், வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் என யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பணி முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் பராமரிப்பு இல்லாததால் புதர்கள் மண்டி போய் நடை பயிற்சிக்காக பதிக்கப்பட்ட கற்கள் மீண்டும் சிதலமடையும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில், சிலர் மது அருந்தும் இடமாக மாறி உள்ளது. ஆதலால் பூங்காவை விரைவாக திறக்கவும், நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் நகராட்சி சங்கினை பழுது நீக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். செங்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள முத்துசாமி பூங்கா-வில் ஒலிபெருக்கி சங்கு தூண் உள்ளது
முன்பு போல் அதனை காலை, மாலை ஒலிக்க செய்ய வேண்டும். மேலும், தியாகி வீரவாஞ்சிநாதன் நினைவை போற்றும் வகையில் அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக ஜூன் 17 அன்று அவர் உயிர் நீத்த நேரத்தில் சங்கை முழக்க செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டை மக்களின் விருப்பமாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com