அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”இன்னைக்கு பயம் வந்துருச்சு ஸ்டாலினுக்கு. இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது. திமுக கூட்டணி வெற்றி பெறாது. ஸ்டாலின் சொல்றாரு.. நீங்க யாரை பிரைம் மினிஸ்டரா சொல்லுவீங்க ? நீங்க யாரை பிரதமரா சொல்லுவீங்கன்னு சொல்றாரு… சரி நாங்க யாரை பிரைம் மினிஸ்டர்ன்னு சொல்றது இருக்கட்டும். இந்தியா கூட்டணியில் நீங்க அங்கம் வகிக்கிறீங்க. உங்களுடைய பிரதமர் யார் என்று திரு.ஸ்டாலின் சொல்ல முடிந்ததா ? தைரியம் இருந்தா சொல்லுங்க பாக்கலாம்.
தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. நம்மை ஒரு துரும்பாகத்தான் பார்க்கிறார். ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். அதோடு நம்முடைய எண்ணம் தமிழக மக்கள் உரிமையை காக்கணும். தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்களை மத்தியிலே பெறுவதற்கும், தமிழகத்திற்கு திட்டங்களுக்கு தேவையான நிதிகளை மத்தியிலே பெறுவதற்கும், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், இதுவே எங்கள் கழகத்தின் தேர்தல் முழக்கம். ஸ்டாலின் அவர்களே.. உங்களைப்போல் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று அண்ணா திமுக நினைக்கவில்லை என தெரிவித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com