தென்னகத்தின் `ஸ்பா” என வர்ணிக்கப்படும் தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டுவது வழக்கம். அந்த சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். ஆனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்போது குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் பருவ மாற்றத்தால் அருவிகளில் வெள்ளம் ஏற்படுவதும், அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்படுவது நடக்கிறது. இந்த நிலையில், வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டால், அவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு மீட்புத்துறையினர் ஒத்திகை நடத்திக் காண்பித்தனர்.
நன்றி
Publisher: www.vikatan.com