மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம், பல மாதங்களைக் கடந்தும் நீடித்துவருகிறது. குக்கி இனப் பெண்கள் கூட்டுப் பாலியல் கொடுமைக்குள்ளான காணொளி, உலகம் முழுவதும் பேசுபொருளானது. பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்றுவந்த பிரதமர் மோடி இன்றளவும் பதற்ற நிலையில் இருக்கும் மணிப்பூருக்குச் செல்லாதது குறித்தும், அங்கு அமைதி திரும்புவதற்காக எதுவும் பேசாத நிலையைக் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில்தான், அமைதி திரும்பாத மணிப்பூரில் மற்றொரு வன்முறைச் சம்பவத்தில் ஐந்து பேர் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், “பர்மாவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படைகளைத் தாக்கலாம் என்று உளவுத்துறை தகவல் வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே மியான்மாரின் எல்லையில் உள்ள மோரே நகரில் காவல்துறை அதிகாரிகள்மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், அந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டுக் கட்சிகளின் தொடர்பு இருப்பது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மோரேயில் நிலைகொண்டுள்ள மணிப்பூர் காவல்துறை கமாண்டோக்கள், குக்கி குழுக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று (வியாழன்) மெய்தி – குக்கி சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்தும் வெவ்வேறு மாவட்டங்களின் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக மேற்கு இம்பால், காங்போக்பி ஆகிய மாவட்டங்களின் எல்லையில் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், ஐந்து மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், ஒரு கும்பல் தௌபால் மாவட்டத்தின் காவல் நிலையத்தில் ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றது. இதில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுக்கு உள்ளாகினர்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com