கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அதன்படி சின்னசேலம் – சேலம் மெயின் ரோட்டில் இருந்த உணவகம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சுமார் 100 சத்துணவு முட்டைகள், முத்திரையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, `குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் இங்கு எப்படி வந்தது?’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். கடை உரிமையாளர்கள் அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதையடுத்து, அந்த முட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதையடுத்து சட்டவிரோதமாக அங்கன்வாடி சத்துணவு முட்டைகளை வைத்திருந்த அந்தக் கடைக்கு ரூ.5,000/- அபராதம் விதித்தனர். அத்துடன், `அங்கன்வாடி குழந்தைகளுக்காக வழங்கப்படும் முட்டைகளை, வியாபாரத்துக்காக இப்படி வாங்குவது குற்றம். சிறிய லாபத்துக்காக நீங்கள் செய்யும் இந்த செயலால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் எச்சரித்துச் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com