Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுப்பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
The post காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com