அதே நேரத்தில் ஓ.பி.எஸுடன் இருப்பவர்கள் அ.தி.மு.கவிற்கு வந்தால் வரவேற்போம். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நேரத்திலே அ.ம.மு.கவைச் சேர்ந்த தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்தான் ஓ.பி.எஸ். மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓ.பி.எஸின் கூடாரமே காலியாகி வருகிறது. ஓ.பி.எஸுக்கு ஆதரவாளராக இருந்தவர்கள் அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
மதுரை எழுச்சி மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தில் முதன்மையாக இயக்கமாக அ.தி.மு.க மாறிவிட்டது. எழுச்சி மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தேசிய அளவிலே பெரிய தலைவராக உயர்ந்துள்ளார். விடியல் தருவேன் என்று கூறி விடியாத ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் 3 மதத்தினரும் சேர்ந்து ’புரட்சித் தமிழர்’ என்ற பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியிருக்கின்றனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com