இந்த நிலையில், இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கார் பந்தயம் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் நடத்துவதால் பெரிய அளவில் அசவுகரியம் ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன. சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 120 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், `உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இந்த பந்தயம் ஏற்கனவே நொய்டா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளதாகவும்” விளக்கமளித்தார். இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும் என்றும் கார்களின் சத்தத்தை கட்டுப்படுத்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இதனிடையே, ஃபார்முலா 4 பந்தயத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுவில் அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் என்றும் பந்தயம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com