வடக்கு கோவாவின் அசோனோரா கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்ததாக ஆன் சுற்றலா பயணியை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று நடந்தது, மேலும் பாதிக்கப்பட்ட பெண் பயணியின் புகாரின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த, லக்ஷ்மன் ஷியார் என்ற 47 வயதான நபரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்ட லக்ஷ்மன் ஷியார் என்ற நபரும் ஏற்கனவே விமானத்தில் கோவாவுக்கு வரும்போது அறிமுகமாகி பேசியுள்ளனர். இருவரும் நாட்பாக பேசிக்கொண்டிருக்கும்போது லக்ஷ்மன் ஷியார் அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கியுள்ளார். பிறகு இருவரும் தனித் தனியே கோவாவிற்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று, அந்த பெண்ணை தொலைபேசியில் தொர்புகொண்டு பேசிய லக்ஷ்மன் ஷியார், அங்குள்ள வசதிகளைக் காண்பிப்பதாகக் கூறி அசோனோராவில் தான் தங்கியிருந்த ரிசார்ட்டுக்குச் வரும்படி வற்புறுத்தியுள்ளர்.
அதன் பிறகு தனியாக ரிசார்ட்டுக்கு வந்த பெண்ணை, லக்ஷ்மன் ஷியார் தனது அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பெண்ணின் புகாரின் அடிப்படையில், போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகருக்கு அருகிலுள்ள திவிம் கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட லக்ஷ்மன் ஷியாரை கைது செய்துள்ளனர்.
நன்றி
Publisher: 1newsnation.com