அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்திருக்கிறது. 300 சதவிகிதம் அதிகமாக செலவழித்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுவதை, அது, நிரந்தர சொத்து உருவாக்கத்துக்காக செலவிடப்பட்ட தொகை என்றும், அதை நிகழ்ச்சிகான செலவாகக் கருதக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பகிர்ந்துள்ள ஆவணத்தில், குறிப்பிடப்பட்டுள்ள ரூ.4,110.75 கோடியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ஐடிபிஓ) கீழ் ரூ.3,600 கோடி செலவினம் பட்டியலிடப்பட்டுள்ளது, இது மொத்தத் தொகையில் கிட்டத்தட்ட 88 சதவீதமாகும். இந்த ரூ. 3,600 கோடி உண்மையில் பிரகதி மைதானத்தில் ITPO வளாகத்தை நிர்மாணிப்பதற்கான செலவாகும். பின்னர் அது அதிகாரப்பூர்வமாக, G20 உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ இடமான பாரத் மண்டபம் என மறுபெயரிடப்பட்டது. நிரந்தர உள்கட்டமைப்பான பாரத மண்டபம் கட்டுவதற்கான செலவு, ஜி20 பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து வேறுபட்டது. இந்த அதி நவீன வளாகத்தின் மறுவடிவமைப்பு மற்றும் மறுசீரமைப்பு 2017 இல் ரூ 2,254 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது.” என்கிறார்
மேலும் ஜி20 மாநாட்டின் வெற்றியை ஏற்க மனமில்லாமல் எதிர்க்கட்சிகள் போலியாக குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கிறார்கள் பாஜக-வினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com