தூத்துக்குடி அருகே கடந்த 28ஆம் தேதி, அதாவது, நேற்றைய தினம் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இரண்டு கார்களில், கடத்தி வரப்பட்ட சுமார் 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதனை கடத்தி வந்த 13 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆரோன், இசக்கி, கணேஷ், சரவணன், ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஸ்வரன், திருமேனி, சம்பத்குமார், தயாளன், அருண்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
மதுவிலக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த பரிந்துரையை மேற்கொண்டதை தொடர்ந்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவருக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். ஆகவே மாவட்ட ஆட்சி தலைவர், செந்தில் ராஜ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை தொண்டர்கள், தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆகவே, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சிவசுப்பு, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை மதுரை சிறையிலும், மற்ற 12 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com