கூட்டணி அரசியல், வாக்கு வங்கி அரசியல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என இதையெல்லாம் பார்க்காமல், தமிழக முதல்வர் நேரடியாக கர்நாடக முதல்வருடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மத்தியில் தற்போது உருவாகியுள்ள “இந்தியா’ கூட்டணி வலுவான அணி இல்லை. இந்திய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்காதக் கூட்டணி என்று பிரசாரம் செய்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில், இந்தியாவில் வலுவான ஆட்சி அமைவதற்கான சூழல் எதிர் அணியில் இல்லை என்று நாங்கள் பிரசாரம் செய்யும் போது, அதற்கான வலுவான அணி தமிழகத்தில் தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நினைக்கிறது . தேர்தல் நெருங்கும் போது சரியான நேரத்தில் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். அந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக த.மா.கா இருக்கும். அந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com