களஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மறைமலை நகரில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்த தேதியில் முடிக்கப்படவேண்டும் என்று முதல்வர் கூறினார். ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்கக்கூடிய, மின் தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டிற்கண் புதிய சலுகை கட்டணம் முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும், இதற்கு பொது பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணம் இ யூனிட்டிற்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த மின் கட்டணம் குறைப்பால் மாநிலம் முழுவதும் சிறு குடியிருப்பில் வசிக்கின்ற மக்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்தார்.
மேலும் தென் சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்க கட்டணம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாகவும் முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com