SBI Jobs : ரூ. 41,960 வரை சம்பளம்… எஸ்.பி.ஐ வங்கியில் 2,000 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

2000 துணை மேலாளர் (Probation Officer) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீட்டித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:  2000

இதில், பொதுப் பிரிவினருக்கு 810 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 200 இடங்களும் , 300 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 150 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 31.12.2023 தேதிக்கு முன்பாக பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

எஸ்பிஐ துணை மேலாளர் அதிகாரி  தேர்வு முறை :  முதல் நிலைத்தேர்வு(Prelims Exam), முதன்மைத் தேர்வு(Main Examination), நேர்காணல் (Interview) ஆகிய மூன்று நிலைகளில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

முக்கியமான தேதிகள்:  இணையவழியில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்:  03/10/2023;

அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வுக்கான தேதிகள் : முதல் நிலைத் தேர்வானது நவம்பர்  மாதத்திலும், முதன்மைத் தேர்வானது 2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும், நேர்காணலுக்கான அழைப்பு 2024 ஜனவரி/பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி : முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS

ADVERTISEMENT NO: CRPD/PO/2023-24/19 ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *