கவர்னரின் உருவம் கொண்ட பாப்பாஞ்சி எரிக்கப்பட்டபோது போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்ரச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் அனுஸ்ரீ உள்ளிட்ட 20 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து அனுஸ்ரீ கூறுகையில், “கேரளா பல்கலைகழகங்களை மையமாகக்கொண்டு வகுப்புவாத ரீதியாக அணுகிவரும் கவர்னருக்கு எதிராக கடந்த சில நாள்களாக எஸ்.எஃப்.ஐ பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கண்ணூர் பய்யாம்பலத்தில் கவர்னரின் பாப்பாஞ்சியை எரித்துள்ளோம். புத்தாண்டில் கல்வித் துறையில் எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் உள்ளது. இந்த நிலையில் கவர்னரின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு, ஜனநாயக முறையில் பல்கலைகழகங்களை மாற்றும் புதிய காலகட்டம் வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
அதே சமயம் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கவர்னர் ஆரிப் முகம்மது கான், “கண்ணூரில் எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் தனது உருவபொம்மையை எரித்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அது அவர்களது பழக்கவழக்கத்தை காட்டுகிறது. எத்தனையோ நபர்களை கொலை செய்தவர்கள்தான் அவர்கள். முதல்வர்தான் போராட்டக்காரர்களுக்கு அனுமதி கொடுக்கிறார். அவர்கள் எதற்காக இந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என புரியவில்லை. தாக்குதல் நடத்துபவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் உறுதுணையாக இருக்கிறார். எனது உருவபொம்மையைத்தான் எரித்தார்கள். ஆனால், அவர்கள் கண்ணூரில் பலரை உயிரோடு கொல்லவில்லையா?” என கவர்னர் கேள்வி எழுப்பினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com