அதில் அவர், “இளைஞரணி மாநாடாம் …. பிரம்மாண்ட முன்னேற்பாடாம்…. முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்…
தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு…. அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா? என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்….


இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர்…. இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே ஏன்? என்று கேட்கிறது அதே குரல்….
இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால்? ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்…. ஆனால் ஜனநாயகத்தில் ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்…
உரிமை மீட்பு மாநாடாம்? காவிரி உரிமையை தொலைத்தது யார்? கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்? கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்? நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்? உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்..
வாரிசுகளுக்கே அரியணையா? இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?
(தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள்….” என குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com