இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கருத்து சொன்னார் என்றால் அதை ஆளும் கட்சி நிர்வாகிகள் எந்த அளவுக்கு மோசமாக எதிர்கொள்கிறார்கள் என்பதை வைத்து இதை போன்றவர்கள் நாம் வன்முறையில் ஈடுபட்டால் ஆதரவு கிடைக்கும் என்ற பேச்சுகள் நடைபெறுகிறது என்பது உண்மை. கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள முடியும்; வன்முறையால், கலவரத்தால் எதிர்கொள்ள முடியாது. ஆளுநரின் கருத்திற்கு எதிர்க்கருத்து தெரிவிக்கும் போது ஏன் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்பது எனது கருத்து.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com