`இப்போதே போராட்டத்தை தொடங்கிவிட்டோம்!’
இதனால் அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தி.மு.க-வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) மட்டும் பங்கேற்கவில்லை. இருந்தபோதும் அவர்களை வைத்து கால்பகுதி பேருந்துகளைக்கூட இயக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால், அரசாங்கம் இதை எப்படி சமாளிக்கப்போகிறது, பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு எப்படி தங்கள் ஊர்களுக்குப் பயணம் செய்வார்கள் என்ற பலகேள்விகள் எழுந்துவருகிறது. இந்தநிலையில், பெரம்பூர் டிப்போ அரசுப் பேருந்து நடத்துனரும், சி.ஐ.டி.யூ துணைத் தலைவருமான மதியிடம் பேசினோம். “அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்லிவிட்டது! எனவே நாளையோ நள்ளிரவோ அல்ல இப்போதே எங்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்.
குறிப்பாக, ஐயப்பன்தாங்கல், வடபழனி டிப்போக்களில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் இப்போதே தங்களின் டிப்போக்களுக்கு பேருந்துகளை திருப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும், தொ.மு.சவால் முழு பேருந்துகளையும் இயக்கமுடியாது. அரசாங்கம் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபடி சிலரை மிரட்டி கையெழுத்து வாங்கியும், வெளியிலிருந்து தனியார் ஓட்டுநர்களை தற்காலிகமாகப் பணியமர்த்தியும் பேருந்துகளை இயக்க முயற்சிக்கும். அப்படியிருந்தாலும் நாளை 30% பேருந்துகளை மட்டுமே இயக்க முடியும். அதன்பிறகு ஷிப்ட் கணக்கு, வேலைப்பளு, ஆள்பற்றாக்குறை காரணங்களால் ஒவ்வொருநாளும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டேப் போகும்!” என அதிர்ச்சி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com