முன்னதாக சத்யபிரியா காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய போது ‘சொந்த தேவைக்கு அரசின் வாகனங்களை பயன்படுத்தினார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காவலர்கள் மருதுபாண்டி, சிலம்பரசன் மற்றும் அலுவலக உதவியாளர் ஜானகிராமன் ஆகியோரை வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தினார் என்ற புகாரும் கிளம்பியது. மேலும் 2017-ல் சத்யபிரியாவின் மகன் ஓட்டிச்சென்ற வாகனம் மதுரவாயல்அருகே விபத்துக்குள்ளானது. ஆனால் காவலர்தான் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினார் என ஆள்மாறாட்டம் செய்ததாகவும் சர்ச்சை கிளம்பியது.
வாகனத்தை சரிசெய்வதற்கு பயிற்சி பள்ளியின் நிதியில் இருந்து முறைகேடாக ரூ.1.32 லட்சம் செலவு செய்யப்பட்டது’ என்ற குற்றச்சாட்டும் வெடித்தது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்திருக்கிறது. இந்த சூழலில் உள்துறை செயலர் அமுதா, ‘சத்யபிரயா ஐபிஎஸ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சத்யபிரியா அளித்த விளக்கம் மற்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட மெமோ குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com