Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தனது செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2019-2020 to 2021-2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 25.08.2023 முதல் தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீடு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
The post நோட்…! TRB தேர்வுக்கு வெளியானது Hall Ticket…! உடனே பதிவிறக்கம் செய்ய வேண்டும்..! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com