முதல்வர் அதிரடி அறிவிப்பு! முதியோர் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்வு !
முதியோர்களுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டது தான் முதியோர் ஓய்வூதியம். அது நிறைய பெரியவர்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. எனவே ஆந்திர மாநில முதல்வர் ஜனவரி 1 முதல் அரசு சார்பில் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் ஆனது ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Also Read >> விண்ணப்பபதிவில் உருவான புதிய சிக்கல்! ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்குமா? அதிர்ச்சியில் மக்கள்…!
அப்போது அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் முதியோர் ஓய்வூதியம் ரூ. 3000 ஆக ஜனவரி 1 முதல் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
அது போல மார்ச் மாதத்தில் தேர்தல் வர இருப்பதாகவும் அந்த தேர்தலுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறினார். மேலும் தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்வது தமது பொறுப்பு என்றார். மேலும் நன்மைகளை கிராமம், கிராமமாக அனைவரும் தெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in