மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தமிழக மாணவர்களுக்கு 5000 ஊக்கத்தொகை – அரசு உத்தரவு!
தமிழத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் உடனடியாக ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்காத மாணவர்களின் விவரங்களை அனுப்புமாறு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தவிப்பற்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலமாக மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.5000 ஊக்கத்தொகையும், ஒவ்வொரு மாதமும் அதற்கான வட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதியான மாணவர்களை தேர்வு செய்து தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படாத நிலையில் அதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்க்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஊக்கத்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஊக்கத்தொகை பெறவில்லை எனில், அந்த மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை அனுப்பியுள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in