தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பல்வேறு நோக்கங்களுக்காக மக்கள் வங்கிகளில் கணக்குகள் தொடங்குகிறார்கள். அவ்வாறு தொடங்கப்படும் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தப்பட்ச இருப்புத்தொகை இருக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு இல்லை என்றால் அபரதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். அதைப்பற்றி முழு விவரங்களை பாக்கலாம்.
மினிமம் பேலன்ஸ் என்றல் என்ன? மினிமம் பேலன்ஸ் இல்லை என்றல் என்ன நடக்கும்?
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கணக்கை தொடங்கும்போது குறைந்தபட்ச இருப்புத்தொகையை வங்கிகள் விதிக்கின்றனர். அந்த இருப்புத்தொகை இல்லையெனன்றால் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தொகை கிராமப்புற வங்கி, நகர்ப்புற வங்கி என மாறுபடும்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் குறைந்தப்பட்ச இருப்புத்தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்க உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்த முக்கிய விதிகள் என்ன?
அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்தப்பட்ச இருப்புத்தொகை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS), மின்னஞ்சல் (Mail) அல்லது கடிதங்களின் மூலம் அறிவிக்க வேண்டும். செய்தி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும். அதையும் மீறி இருப்புத்தொகை இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும். வாடிக்கையாளர் வங்கிகக்ணகில் எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in