இந்தியாவில் எனது டிஜிட்டல் நாணயத்திற்கான பணத்தை நான் எப்படி பெறுவது?

RBI டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்ற முடியுமா

RBI டிஜிட்டல் கரன்சியை (e₹-R) பணமாக மாற்ற முடியுமா?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை(e₹-R) வெளியிட்டுள்ளது. தற்போது வங்கிகள் மற்றும் மிகப்பெரிய பரிவர்த்தனைகளுக்கு மட்டும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தும் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் இந்த டிஜிட்டல் கரன்சி விரைவில் வரும் என சொல்லப்பட்டுள்ளது.

RBI டிஜிட்டல் கரன்சி (e₹-R) என்றால் என்ன?

RBI டிஜிட்டல் கரன்சி (e₹-R) எங்கு வாங்க வேண்டும்?

RBI டிஜிட்டல் கரன்சி (e₹-R)எப்படி செயல்படும்?

RBI டிஜிட்டல் கரன்சியை (e₹-R) பணமாக மாற்ற முடியுமா?

RBI டிஜிட்டல் கரன்சியின் (e₹-R) நன்மைகள் என்ன?

என்பதை இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

RBI டிஜிட்டல் கரன்சி (e₹-R)என்றால் என்ன?

ஆன்லைனில் மட்டுமே இருக்கும் கிரிப்டோகரன்சிகள் அண்மைய ஆண்டுகளாகவே புழக்கத்தில் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே ஏதோ ஒரு தனியார் அமைப்பினால் உருவாக்கப்பட்ட கரன்சியாகவும் decentralised சர்வர் மூலமாகவும் நிர்வகிக்கப்படும் கரன்சியாகவும் இருக்கும். இதன் மதிப்பு ஏற்றம் இறக்கம் கொண்டதாக இருக்கும்.

இந்திய அரசின் அதிகாரபூர்வ மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி சார்பாக “டிஜிட்டல் கரன்சி” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் Central Bank Digital Currency (CBDC) என்று அழைக்கப்படுகிறது. சாதாரண ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு இருக்கும் அதே மதிப்பு தான் டிஜிட்டல் கரன்சிகளுக்கும் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம், டிஜிட்டல் கரன்சி உங்கள் கணக்கில் டிஜிட்டல் டோக்கன் வடிவில் மட்டுமே இருக்கும். அதனை நீங்கள் பொருள்கள் வாங்க பயன்படுத்தலாம், பிறருக்கு அனுப்பலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

RBI டிஜிட்டல் கரன்சியை (e₹-R) எங்கு வாங்கலாம்?

தற்போது வங்கிகள் மற்றும் பிற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் கரன்சி மூலமாக பண பரிவர்த்தனை செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை மத்திய வங்கியில் டிஜிட்டல் கரன்சியை வாங்கி பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் RBI டிஜிட்டல் கரன்சி அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வரும். டிஜிட்டல் கரன்சி தேவைப்படுவோர் அதனை வங்கிகளில் வாங்கிக்கொள்ள முடியும். உங்களுக்கு என ஒரு டிஜிட்டல் வாலட் உருவாக்கப்பட்டு அதிலே உங்களுக்கான டிஜிட்டல் பணம் வரவு வைக்கப்படும். நீங்கள் அதனை பயன்படுத்தி பொருள் வாங்கலாம், பண பரிவர்த்தனை செய்யலாம். தற்போது ஆன்லைன் பேங்கிங் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதைப்போலவே நீங்கள் டிஜிட்டல் கரன்சியையும் பயன்படுத்தலாம்.

RBI டிஜிட்டல் கரன்சி (e₹-R) எப்படி செயல்படும்?

RBI டிஜிட்டல் கரன்சியானது பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால், இதன் சர்வரை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தான் நிர்வகிக்கும். டிஜிட்டல் கரன்சியானது பயனாளர்களின் wallet வரவு வைக்கப்படும். நீங்கள் யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டுமானால் அவர்களுக்கு அனுப்ப முடியும். கூடிய விரைவில் பொருள்களை வாங்கவும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த முடியும்.

RBI டிஜிட்டல் கரன்சியை (e₹-R)பணமாக மாற்ற முடியுமா?

மத்திய ரிசர்வ் வங்கி அதன் முதல் டிஜிட்டல் கரன்சியான CBDC டிஜிட்டல் கரன்சியை வெளியிட்ட பிறகு எழுந்த முக்கியமான சந்தேக கேள்விகளில் ஒன்று “RBI டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்ற முடியுமா?” என்பது தான். நீங்கள் டிஜிட்டல் கரன்சியை வைத்திருந்தாலும் உங்களுக்கு தேவையான நேரத்தில் பணமாக அதனை மாற்றிக்கொள்ள முடியும். சாதாரண பணமாக இருந்தாலும் டிஜிட்டல் கரன்சியாக இருந்தாலும் இரண்டின் மதிப்பும் ஒன்றாகவே இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

RBI டிஜிட்டல் கரன்சியின் (e₹-R) நன்மைகள் என்ன?

எளிதாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன்களில் இருந்து பணப் பரிமாற்றம் விரைவாகவும், தொந்தரவின்றியும் இருக்கும்.

கள்ள நோட்டுகள் பிரச்சனையை தடுக்க முடியும்

நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவு குறையும்

பண நோட்டுகள் கிழிவது, தொலைவது உள்ளிட்ட பிரச்சனைகள் CBDCகரன்சியில் இருக்காது.

Blockchain என்றால் என்ன?

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

2 Replies to “இந்தியாவில் எனது டிஜிட்டல் நாணயத்திற்கான பணத்தை நான் எப்படி பெறுவது?

  1. ஆர்பிஐ டிஜிட்டல் கரன்சி பற்றிய உங்கள் கட்டுரைக்கு நன்றி. xrp eth போன்ற altcoins வாங்குவதற்கான படிகளைப் பகிரவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *