உதயநிதியின் பேச்சுக்கு காங்கிரஸ் சார்பில் முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் அதன் பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால். அவர், ‘அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்வதற்கான உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றன. அனைவரின் நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்றார்.
இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உதயநிதியின் கருத்தை ஏற்கவில்லை. ‘தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. அனைத்து மதங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். சனாதனம் குறித்து உதயநிதி பேசிய கருத்து கவனம் பெற்றிருக்கிறது. அவர், அரசியலுக்கு புதிதாக வந்தவர். என்னை பொருத்தளவில் எல்லோரும் அனைத்து மதங்களையும் மதிப்புடன் சமமாக நடத்த வேண்டும்’ என்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், உதயநிதியின் சனாதன எதிர்ப்பு கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள்தான் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். மற்றபடி, இங்கு பெரிய எதிர்ப்பு இல்லை. அதனால்தான், கே.எஸ்.அழகிரியே அந்த கருத்தை ஆதரிக்கிறார். ஆனால், வட இந்தியாவில் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்பினால் இந்தியா கூட்டணிக்கு சங்கடம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவேதான், காங்கிரஸ் தலைவர்களோ, இந்தியா கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மற்ற தலைவர்களோ, உதயநிதியின் பேச்சை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com