பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் தாக்குதலின் அடிப்படையில், இஸ்ரேல் போர் புரிந்துவருகிறது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோரும், பாலஸ்தீன் தரப்பில் 13,000-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது, ஹமாஸ் தங்களிடம் இருக்கும் 200 இஸ்ரேல் பணயக் கைதிகளை குறிப்பிட்ட அளவில் விடுவித்துவருவதால், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்திவைத்திருக்கிறது.
இருப்பினும், ஹமாஸை நம்பவேண்டாம் என, அமெரிக்கா கூறி வருகிறது. இப்படியான சூழலில், அக்டோபர் 17-ம் தேதியன்று காஸாவிலுள்ள மருத்துவமனையொன்றில் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில், மருத்துவமனை ஊழியர்கள், அதிலிருந்த நோயாளிகள், குழந்தைகள் என 471-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என பாலஸ்தீனம் குற்றம்சாட்டியது.
நன்றி
Publisher: www.vikatan.com