பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை எதிர்பாராத வகையில், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதாவது, பிக்பாஸிடம் பேச வேண்டுமென்று இரண்டு மணி நேரம் கோரிக்கை வைத்த பவாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கன்ஃபெஷன் அறையில் பிக்பாஸிடம் பேசிய பவா, இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்து கொண்டதாகவும், இனிமேல் ஒரு நாள் கூட தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று பிக்பாஸ் கேட்க அதற்கு பதிலளித்த பவா, இங்கு மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுகின்றன.
இதற்கு மேல ஒரு சதவீதம்கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதன் பிறகும் பிக்பாஸ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பவா இறங்கி வரவே இல்லை. பின்னர், நீங்கள் சொல்வது வரையிலும் இங்கேயே தான் இருப்பேன் என்று கன்ஃபெஷன் அறையிலேயே அமர்ந்திருந்ததாகவும், பின்னர் அவர் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கதை சொல்லி என கருதப்படும் இவர், இந்த சீசனில் சொல்லிய ஒரு சில கதைகளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், மிகவும் கடினமான போட்டியாளராக இருப்பார் என கருதப்பட்டது. ஆனால், அவர் ஒரே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளது. ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com