தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கரின் திருமணம் நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், “திருமண மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். நாங்கள் சந்தர்ப்பத்துக்குப் பேசுபவர்கள் கிடையாது.
சத்தியத்தைப் பேசுபவர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அது இல்லாமல் எதுவும் கிடையாது. நான் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். மொழிச் சிறுபான்மை மதச் சிறுபான்மை என்று சொல்கிறீர்கள். மதம் மாறக்கூடியது. பெரியார் சொன்னதுபோல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.
கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள். 18 சதவிகித ஜி.எஸ்.டி என்பதை சிறுபான்மை மக்கள் என்றால் 10% ஜி.எஸ்.டி-ஆக தரப் போகிறார்கள். இதில் என்ன பெரும்பான்மை, சிறுபான்மை எனப் பேசுகிறீர்கள். அரசியல் சாசனத்தில் சிறுபான்மையின மக்களுக்குச் சலுகைகள் மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்திருக்கின்றனர்.
ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்பு பதவியை அப்துல் கலாமுக்கு கொடுத்தார்கள். இந்த நிலத்தில் சிறுபான்மை மக்களுக்குத் தேவைப்படுவது உரிமை. சலுகைகள் அல்ல. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com