ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பி உதவியதாக சொல்லப்பட்டது. போரின் தொடக்கத்தில், ஹமாஸ் தீவிரவாத குழு, அதை ஒழித்தாக வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஆதரவளித்தன.
அதன் விளைவு, போரை நிறுத்துவதற்கான ஐ.நா தீர்மானம், பல நாடுகள் வலியுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தாலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸை ஒழிப்பதே இலக்கு, அதுவரை போர் ஓயாது என பகிரங்கமாக கூறிவருகிறார். அதோடு, இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன அப்பாவி மக்களின் பலி எண்ணிக்கையும் 25,000-ஐ கடந்து நீண்டுகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில். அமெரிக்கா தனது ஆதரவை நிறுத்திவிட்டால் நெதன்யாகு 10 நிமிடம் கூட உயிரோடு இருக்கமாட்டார் என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இஸ்ரேலின் தாக்குதலில் குறித்து ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், “இஸ்ரேலின் இனப்படுகொலை போரில், போர் தளவாடங்கள், ஆயுதங்கள், அரசியல், ஊடக ஆதரவை அமெரிக்கா இன்று நிறுத்தினால், நெதன்யாகு 10 நிமிடங்கள் கூட உயிருடன் இருக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்.
எனவே, போரை நிறுத்துவதற்கான திறவுகோலாக இஸ்ரேலுக்கு முன் இருப்பது அமெரிக்கா. போர் நீள்வதை எதிர்ப்பதாக அமெரிக்கா கூறினாலும், மனிதாபிமான உதவிக்காக காஸாவில் போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா தீர்மானங்களையும் அது தடுத்திருக்கிறது. போரின் நோக்கம் விரிவடைந்திருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், பிராந்தியத்தில் ஒரு பரந்த யுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்திருக்கிறது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com