Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கல்லூரி /பல் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஈடுகட்ட உதவும் வகையில் கல்வி முன்பணம் என்ற வட்டியில்லா முன்பணம் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது அதில் அரசு ஊழியர்களின் ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது கல்வி முன்பணம் இதில் எது குறைவோ என்ற வரம்பின் அடிப்படையில் பெறலாம் என அரசாணை வெளியிடப்பட்டது.
மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு. அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகையானது கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது இவ்வரசால் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-2024 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.
தொகுதி C மற்றும் D ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.தொகுதி A மற்றும் B அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படைஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.
தொழில் முறை கல்விக்கு ரூ.2,500-லிருந்து ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.2,000- விருந்து ரூ.25,000, பல்தொழில்நுட்ப கல்லூரி ரூ.1000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
The post அசத்தல் அறிவிப்பு…! மாணவர்களுக்கு வட்டியில்லா முன்பணம் உயர்வு…! எவ்வளவு தெரியுமா…? appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com