இந்த நிலையில், “ஒரு குடும்பத்தை துப்பாக்கிமுனையில் கொல்வது தவறு. ஆனால், ஷெல் தாக்குதல் மட்டும் சரியா?” என்று இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா (Rania Al Abdullah) கேள்வியெழுப்பியிருக்கிறார்.
பிரபல ஆங்கில ஊடகத்திடம் இஸ்ரேல் தாக்குதல் பற்றி பேசிய ரானியா அல் அப்துல்லா, “அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடந்தபோது, உலக நாடுகள் பலவும் சந்தேகத்துக்கு இடமின்றி இஸ்ரேல் பக்கம் நின்றன. அதோடு, தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தாக்குதலைக் கண்டித்தன. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக உலக நாடுகள் அமைதியாக இருப்பதைப் பார்க்கிறோம்.
உலக நாடுகள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்துவதையோ அல்லது உயிரிழப்புகளை ஒப்புக்கொள்வதையோ நிறுத்திவிட்டன. ஆனால், `இஸ்ரேலுக்கு எப்போதும் ஆதரவாக நிற்கிறோம்’ எனச் சொல்வதை மட்டும் நிறுத்தவில்லை. துப்பாக்கிமுனையில் ஒரு குடும்பத்தைக் கொல்வது தவறு என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் ஷெல் தாக்குதலால் கொல்வது மட்டும் சரியா… அப்படியானால் இங்கு தெளிவான இரட்டை வேடம் இருக்கிறது. இது அரபு நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com