மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி (திருணமூல் காங்கிரஸ்), ஜாவேத் கான் (சோஷலிஸ்ட் கட்சி), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சஞ்சய் ராவத் (சிவசேனா), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), லல்லன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)
டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஒமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழு தான் கூட்டணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும். இதுதவிர பிரசாரக் குழு, சமூக ஊடகங்களுக்கான பணிக்குழுக்கள், ஊடகம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய நான்கு குழுக்களும் இருக்கும். இந்தக் குழுக்களில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com