கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.`கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்ற கனடாவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் அமெரிக்காவும், ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.


மேலும், சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்துச் செயல்படும் நியூயார்க் வாசியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கும் இந்திய அரசு ஊழியர் ஒருவருடன் 52 வயது நபர் பணிபுரிந்ததாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று, இஸ்ரேலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், “இந்திய அரசு அமெரிக்காவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இது இந்தியா அரசின் பொருத்தமான முடிவு. மேலும் இந்தியாவின் நடவடிக்கையைக் காண எதிர்நோக்கி உள்ளோம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com