ஆர்.எஸ்.எஸ் மற்றும் அது போன்ற தீவிர வலதுசாரி அமைப்புகள் மதச்சார்பற்ற இந்தியாவை `இந்து ராஷ்டிரம்’ என்று கூறிவருகின்றன. இதில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வும், தங்களின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-ஸின் எண்ணப்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற முயன்றுவருவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஒருபடி மேலாக, இஸ்லாமியர்கள் தங்களின் மூதாதையர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும், இந்துக்கள் என்றால் அது அனைத்து இந்தியர்கள் என அர்த்தம் என்றும் கூறியிருக்கிறார்.
முன்னதாக, ‘தெய்னிக் தருண் பாரத்’ நாளிதழை நடத்தும் ஸ்ரீ நர்கேசரி பிரகாஷன் லிமிடெட் நிறுவனத்தால், மதுகர் பவன் என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கும் புதிய கட்டடத்தின் திறப்பு விழா நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் இந்தியாவை `இந்துஸ்தான்’ என்றும், இந்தியர்களை `பாரதியாஸ்’ என்றும் குறிப்பிட்டுப் பேசிய மோகன் பகவத், “இந்துஸ்தான் ஓர் இந்து ராஷ்டிரம். இதுவே உண்மை. கருத்தியல்ரீதியாக பாரதியாஸ் அனைவரும் இந்துக்கள், இந்துக்கள் என்றால் `அனைத்து பாரதியாஸ்’ என்று அர்த்தம். இன்று பாரதத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்து கலாசாரம், இந்து முன்னோர்கள், இந்து நிலம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். இவை தவிர இதில் வேறொன்றுமில்லை.
சிலர் இதைப் புரிந்துகொண்டுவிட்டனர். அதேசமயம், சிலர் புரிந்துகொண்டும்கூட தங்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சுயநலத்தால் இதை நடைமுறைப்படுத்தவில்லை. எங்களின் சித்தாந்தம் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. உண்மையில் இந்தக் கருத்தியலில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லோரும் இதைப் புரிந்துகொண்டுவிட்டனர். அதைச் சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், சிலர் ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com