தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு பெயர் போன இவரது இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் திரைப்படத்தலத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்த நிலையில் இந்த வருடத்தின் துவக்கத்தில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
தற்போது இந்தியன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக மேலும் சில காட்சிகளை சேர்ப்பதற்கான படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதற்கான சூட்டிங் தற்போது விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இதில் 8000 துணை நடிகர்கள் கலந்து கொள்ளும் மிகவும் பிரம்மாண்டமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மீதி இருக்கும் படப்பிடிப்புகளும் முடிவடைந்த பின்னர் விரைவிலேயே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக் குழு தெரிவித்து இருக்கிறது. இந்த புதிய படப்பிடிப்பு செடியுலில் விரைவில் உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com