GDP: முந்தைய காலாண்டைவிட அதிகம்; கடந்த ஆண்டைவிடக் குறைவு!

கடந்த ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.1% வளர்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் ஒப்பிட்டால், ஜூன் காலாண்டில் பொருளாதாரம் மேலும் வளர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 13.1% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இத்துடன் ஒப்பிட்டால் இந்தாண்டு ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

ஏப்ரல் – ஜூன் காலாண்டில் வேளாண் துறை 3.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் வேளாண் துறை 2.4% வளர்ந்திருந்த நிலையில், இந்தாண்டு மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

எனினும், ஜூன் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 4.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் உற்பத்தி துறையின் வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% வளரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியமும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பை 6.1 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சீனப் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *