Radioactive Rotis: சோதனையில் 21 இந்திய வம்சாவளி பெண்கள்…

இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி தைவோ ஒவாடெமி (Taiwo Owatemi). இவர் தற்போது வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் (west Midlands) பகுதியின் எம்.பி-யாக பணியாற்றி வருகிறார். தெற்காசியப் (இந்திய வம்சாவளி) பெண்களை வைத்து 1969-ம் ஆண்டு ‘சிப்பாட்டி’ என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக இங்கிலாந்து எம்.பி தைவோ ஒவாடெமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “கதிரியக்க ரொட்டி தொடர்பான ஆராய்ச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் அனீமியா (Anaemia) நோயைக் கட்டுப்படுத்த, தெற்காசிய பெண்களிடையே 1969-ல் ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறார் டாக்டர் எல்வுட் (Dr Elwood). அவர்களிடம், தெற்காசிய உணவு முறைகளின் காரணமாக மாவிலிருந்த இரும்பு சத்து சரியாகக் கரையாததால் இந்த இன்னல்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எம்ஆர்சி) நிதியளித்தது. இதன் படி 21 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரொட்டி | சப்பாத்தி

அதோடு, அந்தப் பெண்களிடம் இரத்த சோகை (Anaemia) தொடர்பாக ஆய்வு நடத்துவதாக தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு தினமும் ரொட்டி வழங்கியிருக்கின்றனர். இந்த ரொட்டியை சாப்பிடுவதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டை தவிர்க்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு காமா-பீட்டா கதிர்களை உமிழக்கூடிய இரும்பு ஐசோடோப்பான இரும்பு-59 கொண்ட ரொட்டிகள் அல்லது சப்பாத்திகள் கொடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சோதனை நல்ல முடிவுகளைத் தரவில்லை. மாறாக அவர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியது.

அதன்பிறகு யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பெண்களைப் பற்றிய தற்போதைய தகவல்கள் வெளியாகவில்லை. தைவோ ஒவாடெமி பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “செப்டம்பரில் நாடாளுமன்றம் திரும்பிய பிறகு கூடிய விரைவில் இது பற்றிய விவாதத்திற்கு நான் அழைப்பு விடுப்பேன், அதைத் தொடர்ந்து இது எப்படி நடந்தது என்பது பற்றிய முழுமையான சட்டரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும்.

அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எம்ஆர்சி ( Medical research council) இது தொடர்பான விரிவான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *