இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், “இஸ்ரேலும், அமெரிக்காவும் காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும்” எனக் கூறியிருக்கிறார். “இந்த நிலைமைய தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு யாரும் இஸ்ரேல் மீதோ, எங்களின் துருப்புகள்மீது தாக்குதல் நடத்தக் கூடாது.
அவ்வாறு தாக்குதல் அதிகாரித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்” என எச்சரித்திருக்கிறார், அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் அந்தோணி பிலின்கன். மறுபுறம் சீனா, ரஷ்யா, சவூதி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் சரக்கு விமானங்கள் மூலம் எகிப்தின் அல் ஆரிஷ் விமான நிலையத்துக்கு சுமார் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அங்கிருந்து அவை காஸாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com