கர்நாடகா: வெஜிடேரியன் என்று தெரிந்தும், மாணவியை முட்டை

கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டம், அமிர்தா கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சைவ உணவு உண்ணும் இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது ஏழு வயது மகளுக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டியதாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுமியின் தந்தை ஸ்ரீகாந்த், தனது புகாரில், `நாங்கள் கடுமையான சைவ உணவைப் பின்பற்றுபவர்கள் என்று பள்ளி அதிகாரிகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறோம். இதை அறிந்திருந்தும், பள்ளியில் மதிய உணவு பரிமாறும் போது, ஆசிரியர் எனது மகளுக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டினார். இதுகுறித்து யாரிடமாவது புகார் அளித்தால் அடிப்பதாக குழந்தையை ஆசிரியர் மிரட்டியுள்ளார். இதனால் தனது மகள் நடத்தையில் சில நாள்களாக மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக தனது ஆசிரியர் தன்னை முட்டை சாப்பிடும்படி வற்புறுத்துவதாக என் மகள் என்னிடம் கூறினார், இருப்பினும் நான் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் என் மகள் ஆசிரியருக்கு பயந்து வீட்டில் முட்டை கேட்டதாக ​​என் மனைவி என்னிடம் சொன்னார். இதை உறுதிசெய்ய, இது குறித்து மற்ற வகுப்பு மாணவர்களிடம் பேசியபோது, ​​இரண்டாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் முட்டை சாப்பிட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் தங்கள் மகள் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று தந்தை ஸ்ரீகாந்த் தொகுதி கல்வி அலுவலகத்தில் (BEO) அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின்படி, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மதிய உணவு திட்ட அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களின் முதற்கட்ட விசாரணையில், மதிய உணவு பரிமாறும் போது அனைத்து மாணவர்களும் வரிசையாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது, ​​சம்பந்தப்பட்ட ஆசிரியர் விருப்பப்பட்ட மாணவர்களிடம் முட்டை சாப்பிடுங்கள் என்று கேட்டுள்ளார். எனவே, இந்த சம்மந்தப்பட்ட இந்த குழந்தையும் தனது மற்ற வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து கைகளை உயர்த்தியதாக தெரிகிறது. அதனாலேயே முட்டை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த குழந்தை உட்பட எந்த மாணவர்களும் முட்டை சாப்பிட கட்டாயப்படுத்தப்படவில்லை, ஆரோக்கியமாக உண்ண வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டதாக மூத்த கல்வித் துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் `நாங்கள் இந்தப் பிரச்னையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாணவிக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டப்படவில்லை’ என்றார். இருப்பினும், கல்வி அலுவலர் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்து, விதி மீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *