சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான மற்றும் கோடிகணக்கான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இஸ்டாகிராம் செயலி பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பயனாளர்களை மேலும் கவரும் வகையிலும் அவ்வப்போது அப்டேட்டுகளை வழங்குவது வழக்கம். கொரோனா காலகட்டத்தின் போது டிக் டாக் செயலி மிகவும் பிரபலமாக இருந்தது. அதன்பின், இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் இஸ்டாகிராம் செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
அந்த வகையில், தற்பொழுது மீண்டும் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுவாக இஸ்டாகிராம் பயன்படுத்தும் பெரும்பாலனா பயனாளர்கள் பொது கணக்குகளை வைத்துள்ளனர். அவ்வாறு வைத்திருக்கும் பொது கணக்கு பயனாளர்கள் தங்களின் எந்த போஸ்டில் இருந்தும் தாங்கள் விரும்பும் கமெண்ட்களை ஸ்டோரிகளில் ஷேர் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Also Read : வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பறவைகள்..! என்ன காரணம்?
இந்நிலையில், இந்த புதிய அம்சத்தின் மூலம் முக்கியமான கமெண்ட்களை குறிப்பிட்டு காட்டுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கமெண்ட்களை ஸ்வைப் செய்து ஷேர் ஸ்டோரி என்பதை தேர்வு செய்வதன் மூலம் செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in