பசு கூடங்களைப் பராமரிக்கும் International Society for Krishna Consciousness எனும் ISKCON நிறுவனம், பசுக்களை இறைச்சிக்கு விற்பதாக, பா.ஜ.க எம்.பி மேனகா காந்தி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் தொடர்புடைய இந்த ISKCON நிறுவனம், உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்களையும், மில்லியன் கணக்கில் பக்தர்களையும் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, இதுபற்றி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “ISKCON இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம். பசு கூடங்களைப் பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றுவருகிறது. ஆந்திராவின் அனந்த்பூரில் ISKCON நிறுவனம் பராமரித்துவரும் பசு கூடத்துக்கு ஒருமுறை சென்றேன். அங்கு, பால் தராத பசுக்கள் மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப்படியென்றால், அவையெல்லாம் விற்கப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.
நன்றி
Publisher: www.vikatan.com