நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை, `அவர் ஒரு கல்யாண ஸ்டார்” என்றும், `நான்காண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றுகிறார்’ எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சாடியிருக்கிறார்.
2014-ல் ஆந்திராவில் கட்சி தொடங்கிய பவன் கல்யாண், அந்த ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்தார். பின்னர், 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது சாரிகள், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜன சேனா கட்சி, தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பவன் கல்யாண் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.
தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்கூட பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து எட்டு இடங்களில் போட்டியிட்ட ஜன சேனா கட்சி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 2024 சட்டமன்ற, லோக் சபா தேர்தலை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க-வுடன் பவன் கல்யாண் கூட்டணியமைத்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com