
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்து உள்ள நடிகர் கமல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தை நடிக்க உள்ளார்.
37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அதோடு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ALSO READ : பட்டாசு வெடிக்க விதிமுறைகள் வெளியீடு! சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்! தீபாவளி 2023
அதோடு இப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அதை தொடர்ந்து இந்த படத்திற்கு ”தக் லைப்’ என்று பெயரிடப்பட்டு உள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது. மேலும் அப்படத்தின் அறிமுக வீடியோவும் நேற்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ ரசிகர் இடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கமலின் பிறந்த நாளை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழு ‘தக் லைப்’ புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளது. மேலும் அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in