அதோடு, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் மேற்கொண்ட கரூர்-வாங்கல்-மோகனூர் இணைப்புச்சாலை பணிகளை ஆய்வு செய்ததோடு, அவை தரமற்றதாகப் போடப்படுகின்றன என்று சொல்லி, மறுபடியும் அந்தச் சாலைகளை தரமானதாகப் போடச் சொன்னார். இதனால், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்கும், கமிஷனருக்கும் இடையில் ‘ஈகோ’ க்ளாஷ் ஆனது. அதோடு, தனது கன்ட்ரோலில் இருக்கும் கரூர் மாவட்டத்தில், ஓர் அதிகாரி தன்னிச்சையாக, அதுவும் தனக்கு எதிராகச் செயல்பட்டதால், கோபமான எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த், ‘அண்ணன் விரும்பவில்லை’ என்று செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி, தலைமையிடம் கொண்டு சென்று, சரவணக்குமாரை மாற்ற வைத்திருக்கிறார். இவரோடு கைகோத்து கமிஷனரை மாற்றக் காரணமாக இருந்தது, மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு கடைகளை வைத்துக்கொண்டு பல வருடங்களாக குத்தகை வரி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்த மாகநராட்சி வார்டு உறுப்பினர், கரூர் மாநகராட்சி 3-வது மண்டலக் குழு தலைவர், கரூர் மத்திய கிழக்கு மாநகர பகுதி கழகச் செயலாளர் என பல பதவிகளை வகித்து வரும் ‘கோல்டுஸ்பாட்’ ராஜா தான்” என்கிறார்கள்.
சரவணக்குமார் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசும், `என் நண்பன்’ அறக்கட்டளை நிறுவனத் தலைவரான பொன்.முத்துக்குமார்,


“சரவணக்குமார் கரூர் மாநகராட்சி கமிஷனராக பதவியேற்றதிலிருந்து, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும், மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு குத்தகை வரி செலுத்தாதவர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார். அதேநேரம், எங்களைப் போன்று மக்களுக்குச் சேவைகள் செய்யும் சமூக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் நண்பராக இருந்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் இடங்களில் மரக்கன்றுகள் நடலாம் என எங்கள் அமைப்போடு பேசினார். கரூரிலுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்று மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில், அவர் மாற்றப்பட்டிருப்பது, அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தமிழக அரசு, உடனடியாக சரவணக்குமார் மாற்றப்பட்டதை ரத்து செய்து, அவரை மீண்டும் கரூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்க வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com