மஞ்சள் நகரில் வெண்மைத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைக்காக, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, ஒப்பந்தங்களை இறுதிசெய்வது வரை சகலத்திலும் தலையிடுகிறாராம் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர். முப்பது சதவிகிதம் வரை ‘கட்டிங்’ எதிர்பார்ப்பதால், வெலவெலத்துப்போயிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “உதவியாளர்களால் பல அமைச்சர்களின் தலை உருண்டிருக்கிறது. இது தெரியாமல் இவரும் உதவியாளருக்கு ஓவராக இடம் கொடுக்கிறாரே…” என முணுமுணுக்கிறார்கள் மஞ்சள் மாநகர் உடன்பிறப்புகள்.
தி.மு.க-வின் 75-வது ஆண்டு பவள விழாவை, பெரியார் பிறந்தநாளான வரும் 17-ம் தேதி வேலூரில் கொண்டாடத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ‘இந்த விழா, வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமிடும்’ என்றும் முழங்கியிருக்கிறார் ஸ்டாலின். இந்த முறை வேலூரைத் தேர்வுசெய்ய ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். “என் வாழ்நாளையே திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக அர்ப்பணித்துவிட்டேன்.
கடைசி கட்டத்தில், உங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முப்பெரும் விழாவை, நான் பொதுச்செயலாளராக இருக்கும் இந்த நேரத்தில் கோட்டை மாநகரமான என் ஊரில்தான் நடத்த வேண்டும்” என சென்டிமென்ட்டாகப் பேசி, ஸ்டாலினை ஓ.கே சொல்ல வைத்துவிட்டாராம் துரைமுருகன். “விழாவை பிரமாண்டமாக நடத்தி, எப்படியும் மகனுக்கு மறுபடியும் சீட்டை கன்ஃபார்ம் பண்ணிடுவார்” என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com