கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மேலும் 5 மாநில தேர்தல் குறித்துப் பேசினார். “5 மாநில தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மையும், பணவீக்கமும், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதான தொடரும் வன்முறையும் நிச்சயமாக தேர்தல் முடிவுகளை பாதிக்கும். மத்திய அரசாட்சியில் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. INDIA கூட்டணி வலுவான அரசை கட்டமைப்பதற்கான முயற்சிகளை செய்துகொண்டுள்ளது. திமுக INDIA கூட்டணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது.” என்றார்.
தொடர்ந்து சிபிஎம் மாநிலச் செயலாளரான கே. பாலகிருஷ்ணன், “அதிமுக பா.ஜ.க கூட்டணி பிரிந்திருந்தாலும் கூட, அதிமுக கட்சி பாஜக-வின் பி-டீமாகத் தான் இன்றும் செயல்பட்டு வருகிறது. பாஜக-வின் கைப்பாவையாகத்தான் அதிமுக இயங்கி வருகிறது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என மக்களை ஏமாற்றப் பார்க்கிறது அதிமுக. எனவே கடந்த தேர்தலின் கிடைத்த அளவு வெற்றி கூட இந்த வருடம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கப் போவது இல்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் இழைக்கப்பட்ட அநீதி, மற்றும் பிற அநீதிகளை மக்கள் வெகு விரைவில் மறந்துவிட மாட்டார்கள். அண்ணாமலையும், மோடியும் நூறு சதவிகிதம் பொய்யை மட்டுமே பேசக் கூடியவர்கள்.
பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலங்களாக இருக்க சட்டப்படி அமல்படுத்தப்பட்ட திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற அச்சுறுத்தலான திட்டங்களைக் கொண்டு வந்து டெல்டா மாவட்டங்களை நாசமாக்குவது தான் இவர்களின் குறிக்கோள். இதனைதான், தொழிற் சாலைகளை டெல்டா மாவட்டங்களில் வர விடாமல் சிபிஐ தடுக்கிறது என பொய் பிரசாரம் செய்கிறார் அண்ணாமலை. கோடிக் கணக்கான விவசாய மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ, தமிழ்நாட்டின் அதிகப்படியான உணவு உற்பத்தி திறன் பற்றியோ கொஞ்சம் கூட ஞானமே இல்லாமல், ஞானசூனியம் போல் பேசுகிறார் அண்ணாமலை. மத்திய அரசு பருத்தியின் விலையை தாறுமாறாக ஏற்றியாதால் ஜவுளித் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்தியா மட்டுமல்லாது தமிழகத்திலும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் விரைவாக தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, வங்கிக்கடன், மின்சார கட்டணச் சலுகைகள், அரசு கொள்முதல் நிலையங்கள் முதலியவற்றை அமைத்து இயன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை வைக்கிறோம். கனமழைக் காலங்கள் மற்றும், குறைவான குருவை மற்றும் சம்பா சாகுபடி போன்ற இடர் காலங்களில் கூட மத்திய அரசு கண்டும் காணாமல் உள்ளது. மத்திய அரசு இம்மாதிரியான இடர் காலங்களில் நிவாரணத் தொகையை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.” என்றவர், கூட்டணியில் தொகுதிகள் குறித்து கேள்வு எழுப்பியதற்கு, “கோவை உட்பட ஏற்கனவே இருக்கும் இரு தொகுதிகளையும், கூடுதலான தொகுதிகளையும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கேட்போம். தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும். அதில் பிரச்னை ஏற்படும் என பிறர் நினைக்கின்றனர். அதற்கு வாய்ப்பில்லை” என்றும் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com