பட்டாகா சுரேஷ் பாபுவுக்காக வாதிட்ட வழக்குரைஞர், அவர் தொடர்ந்து தனது கல்வியைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, KMTC சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு LLB சட்டப் படிப்புக்கான இடமும் கிடைத்திருப்பதால், அவர் சேர்க்கை தொடர்பான தொடர் நடவடிக்கைகளை நிறைவு செய்யவும், தொடர்ந்து படிக்கவும் கோரி அவருக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதைடுத்து, KMTC சட்டக் கல்லூரியின் முதல்வரும், தேர்வாணையரும் விடியோ கான்பரன்சிங் முறையில் நீதிமன்றம் முன் ஆஜராகி, பட்டாகா சுரேஷ் பாபுவின் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளை ஆன்லைன் மூலம் நடத்த முடியும் எனவும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, கண்ணூர், சீமேனி, திறந்தவெளி சிறைச் சாலையின் கண்காணிப்பாளர், பட்டாகா சுரேஷ் பாபுவின் ஆன்லைன் சேர்க்கைக்குத் தேவையான இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மனுதாரரின் மனைவியை கல்லூரிக்கு நேரில் சென்று பட்டாகா சுரேஷ் பாபுவின் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறும், கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்துமாறும் உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை வரும் அக்டோபர் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com