கும்பகோணம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 13 புதிய திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்து போட வேண்டும் என மேயரிடம் தி.மு.க துணை மேயர் தமிழழகன் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.


அதற்கு, `என்னால் கையெழுத்து போட முடியாது” என மேயர் சரவணன் கூறியுள்ளார். என்ன காரணம் என துணை மேயர் கேட்க, காரணம் கூற முடியாது என மேயர் சொல்லியுள்ளார். இதையடுத்து கூட்டம் நிறைவடைந்துவிட்டதாகக் கூறி மேயர் சரவணன் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே செல்ல முயன்றார். அப்போது துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மேயரை வெளியே செல்ல விடாமல் தடுத்து, இருக்கையில் அமர வைத்து சிறைப்பிடித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com